×

விஜய்சேதுபதி முடிவால் மாஸ்டர் படத்துக்குச் சிக்கலா?

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ’800’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாகச் செய்திகள் வந்தபோதே எதிர்ப்புகள் வந்தன. சமீபத்தில் அப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானதும் எதிர்ப்பு வலுத்தது. முரளிதரன் ஆளும் இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்துகொள்பவர் என்றும், பிரதமர் ராஜபக்ஷேவின் நட்பில் இருப்பவர் என்றும் எதிர்ப்புக்கான காரணம் கூறப்படுகிறது. விஜய் சேதுபதியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவரும் மக்கள் செல்வன் எனும் பட்டத்தை அளித்தவருமான இயக்குநர் சீனு ராமசாமி இந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதியை
 

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ’800’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாகச் செய்திகள் வந்தபோதே எதிர்ப்புகள் வந்தன. சமீபத்தில் அப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானதும் எதிர்ப்பு வலுத்தது.

முரளிதரன் ஆளும் இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்துகொள்பவர் என்றும், பிரதமர் ராஜபக்‌ஷேவின் நட்பில் இருப்பவர் என்றும் எதிர்ப்புக்கான காரணம் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவரும் மக்கள் செல்வன் எனும் பட்டத்தை அளித்தவருமான இயக்குநர் சீனு ராமசாமி இந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதியை விலகும்படி கேட்டுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து இயக்குநர் பாரதி ராஜா நீண்ட கடிதம் எழுதி இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அரசியல்வாதிகள் தரப்பிலும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு வந்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன், இயக்குநர் வ.கெளதமன் உள்ளிட்ட பலரும் விஜய்சேதுபதிக்கு படத்திலிருந்து விலக அழுத்தம் தந்தனர்.

இந்நிலையில் இலங்கை ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ‘முரளிதரன் பயோபிக் படத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார் விஜய்சேதுபதி. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் முரளிதரன் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், விஜய்சேதுபதியின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அவரை கேட்டுக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ‘நன்றி வணக்கம்’ என்று ட்விட் செய்திருந்தார் விஜய் சேதுபதி. இதன்மூலம் படத்தின் மூலம் விலகுகிறார் என்று நாம் யூகிக்கலாம். ஆனால், அவர் தரப்பிலோ படக்குழு தரப்பிலோ விஜய்சேதுபதி விலகிவிட்டார் என்பதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வரவில்லை.

இந்நிலையில் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படத்திற்குச் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

விஜய் நாயகனாக நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் வில்லன் பாத்திரம் ஏற்றிருக்கிறார் விஜய் சேதுபதி. லாக்டெளனுக்கு முன் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. ஆனால், உடனே திரையரங்கங்கள் மூடப்பட்டதால் மாஸ்டர் வெளியாக வில்லை. இடையில் பல படங்கள் ஓடிடி (OTT) யில் வெளிவந்தன. அதன்படி மாஸ்டர் படமும் வெளியாகுமா என்ற கேள்விக்கு படக்குழு தரப்பில் உறுதியாக மறுத்துவிட்டார்கள்.

விஜய்சேதுபதி முரளிதரன் பயோபிக்கில் நடிப்பதால் அந்தப் படம் வெளியானால் திரையரங்கிள் சச்சரவு ஏற்படுத்துவோம் என்றெல்லாம் சில அமைப்புகள் சொல்லி வந்தன. சிலர் விஜய் சேதுபதி நடிக்கும் மாஸ்டர் படத்துக்கும் பிரச்னை ஏற்படக்கூடும் என்ற சந்தேகத்தை எழுப்பினர்.

இந்நிலையில் முரளிதரன் படத்தில் நடிப்பேன் எனச் சொல்லி சில நிமிடங்களில் ‘நன்றி வணக்கம்’ சொல்லியிருக்கிறார். இதன்மூலம் தமிழகத்தில் பலரின் கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை என்றும் இது பார்க்கப்படலாம்.

எனவே, மாஸ்டர் படத்தின் வெளியீட்டின்போது விஜய் சேதுபதியின் முடிவால் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்தப் பிரச்னை எவ்வாறு எதிரொளிக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை.