×

நடிகர் கவுண்டமணி உடல்நிலை குறித்து வெளியான உண்மை !

நடிகர் கவுண்டமணி நலமுடன் இருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கவுண்டமணி ஒருகாலத்தில் திரையுலகில் நகைச்சுவை மன்னனாக வலம்வந்தவர். அவரின் காமெடி, கவுன்டர் எல்லாமே அசத்தலாக இருக்கும். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் நடித்த கவுண்டமணி 40 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்தார். சுமார் 700 படங்களில் இதுவரை நடித்துள்ள கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து செய்த லூட்டி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன. தற்போது 81 வயதாகும் கவுண்டமணி உடல்நிலை குறித்து
 

நடிகர் கவுண்டமணி நலமுடன் இருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கவுண்டமணி ஒருகாலத்தில் திரையுலகில் நகைச்சுவை மன்னனாக வலம்வந்தவர். அவரின் காமெடி, கவுன்டர் எல்லாமே அசத்தலாக இருக்கும். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் நடித்த கவுண்டமணி 40 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்தார். சுமார் 700 படங்களில் இதுவரை நடித்துள்ள கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து செய்த லூட்டி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன.

தற்போது 81 வயதாகும் கவுண்டமணி உடல்நிலை குறித்து அடிக்கடி வதந்தி பரவுவது வழக்கமான ஒன்றாகி உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கவுண்டமணி உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியது. இதுகுறித்து நடிகர் கவுண்டமணி தரப்பில் கூறும் போது, நடிகர் கவுண்டமணி நலமாக உள்ளார். வழக்கமான பணிகள், அடுத்த பட வேலைகளில் ஆர்வமாக, தீவிரமாக இருக்கிறார். அவர் உடல்நிலை குறித்து சிலர் அடிக்கடி தவறான தகவல் பரப்புவதை வேடிக்கை ஆக வைத்துள்ளனர். அதை நம்ப வேண்டாம். கவுண்டமணி முற்றிலும் நலம் என்று விளக்கமளித்துள்ளனர்.