×

இசை கலைஞர்களுக்கு பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்

 

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான், இளம் மற்றும் இசையில் சாதிக்க துடிக்கும் கலைஞர்களை ஊக்குவிக்க HBAR என்ற அறக்கட்டளை மூலம் ஒரு தனித்துவமான டிஜிட்டல் இசை தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். 

இசையுலகின் ஜாம்பவானாக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான், இன்று தனது 55 பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். பிறந்தநாள் வாழ்த்துக்கூறி வாழ்த்து மழையில் நனையவைத்த ரசிகர்களுக்கும், இளம் இசை கலைஞர்களுக்கும் அவர் ஒரு பிறந்தநாள் பரிசை வழங்கியுள்ளார். 

பிறந்தநாளையொட்டி ஏ.ஆர்.ரகுமான் HBAR அறக்கட்டளை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஷைன் ஹிகடன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் துவங்கப்படுவதே  NFT என்ற  டிஜிட்டல் இசை தளம். அதாவது NFT என்பது சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கப்பதற்காக தொடக்கப்படும் ஊடகம். இந்த NFT மூலம் இசை கலைஞர்கள் இண்டிபெண்டெண்ட் ஆல்பத்தை வெளியிடலாம், சுயாதீன கலைஞர்களுக்கான நிதியை திரட்டலாம். அவர்களின் திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க உதவும்  தளமாக அமையும். 

முன்னதாக ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கிய மாஜா தளத்தில் சுயாதீன கலைஞர்களால் பாடி வெளியிடப்பட்ட,  என்ஜாமி எஞ்சாமி என்ற பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.