×

பிராமணர்களை இழிவுபடுத்துகிறதா காட்மேன்?

பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் வெப் சீரிஸில் படத்தை எடுத்த இயக்குனர் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி பிராமணர் சங்கத்தினர் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர் காட்மேன் என்ற வெப் சீரிஸில் திரைப்படத்தில் பிராமணர்களை பற்றியும் இந்து மதத்தைப் பற்றியும் அவதூறான கருத்துக்களும் இழிவுப்படுத்தும் காட்சிகள் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. இது வேண்டுமென்றே ஒரு பிரிவினர் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் மதரீதியான பிரிவுகள் இடையே பகைமையை தூண்டும் வகையிலும் அதன் மூலம் பொது அமைதியை கெடுக்கும்
 

பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் வெப் சீரிஸில் படத்தை எடுத்த இயக்குனர் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி பிராமணர் சங்கத்தினர் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்

காட்மேன் என்ற வெப் சீரிஸில் திரைப்படத்தில் பிராமணர்களை பற்றியும் இந்து மதத்தைப் பற்றியும் அவதூறான கருத்துக்களும் இழிவுப்படுத்தும் காட்சிகள் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. இது வேண்டுமென்றே ஒரு பிரிவினர் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் மதரீதியான பிரிவுகள் இடையே பகைமையை தூண்டும் வகையிலும் அதன் மூலம் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் காட்சிகள் அமைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சீரியலில் இடம் பெற்றுள்ளதால் இதை தயாரித்த தயாரிப்பாளர் இளங்கோவன் மற்றும் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் உள்ள பிராமணர் சங்கத்தினர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். காட்மேன் வெப் சீரியல் திரைப்படத்தை எந்த காரணத்தை கொண்டும் வெளியிடக்கூடாது மேலும் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தி திரைப்படங்கள் சீரியல்கள் எடுக்கக் கூடாது வரும்காலங்களில் இந்து மதத்தை இழிவுப்படுத்தி வசனங்களை காட்சிகளை பயன்படுத்தக்கூடாது என்று பிராமண சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வெப் சீரிஸில் பிரபல நடிகை சோனியா அகர்வால், நடிகர் ஜெய பிரகாஷ் மற்றும் நடிகர் டானியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிராமணாள் மட்டும் தான் வேதம் படிக்கணும்னு எந்த சாஸ்திரத்துல சொல்லி இருக்கு? என்ன சுத்தி இருக்குற எல்லா பிராமணர்களும் அயோக்கியனுங்களா இருக்காணுங்க… என சர்ச்சைக்குரிய வசனங்கள் காட்மேனில் இடம்பெற்றுள்ளன.