×

சினிமா வசன கர்த்தா ஈரோடு செளந்தர் காலமானார்!

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த தமிழ் சினிமாவின் வசன கர்த்தா ஈரோடு செளந்தர் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற சமுத்திரம்,சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை உள்ளிட்ட பல படங்களுக்கு கதை மற்றும் வசனங்களை எழுதியவர் ஈரோடு செளந்தர். கதை எழுதுவதோடு மட்டுமல்லாமல், சீதனம், சிம்மராசி உள்ளிட்ட படங்களையும் இயக்கிவர் இவர். பெரும்பாலும் குடும்பக் கதைகளில் தனது உணர்ச்சி பூர்வமான வசனங்கள் மூலமாக உயிர் கொடுத்தவரும் கூட. வசனங்களுக்கு உயிர் கொடுக்கும் வித்தையை
 

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த தமிழ் சினிமாவின் வசன கர்த்தா ஈரோடு செளந்தர் இன்று காலமானார்.

தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற சமுத்திரம்,சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை உள்ளிட்ட பல படங்களுக்கு கதை மற்றும் வசனங்களை எழுதியவர் ஈரோடு செளந்தர். கதை எழுதுவதோடு மட்டுமல்லாமல், சீதனம், சிம்மராசி உள்ளிட்ட படங்களையும் இயக்கிவர் இவர். பெரும்பாலும் குடும்பக் கதைகளில் தனது உணர்ச்சி பூர்வமான வசனங்கள் மூலமாக உயிர் கொடுத்தவரும் கூட.

வசனங்களுக்கு உயிர் கொடுக்கும் வித்தையை அறிந்த இவருக்கு தமிழக அரசு, நாட்டாமை மற்றும் சேரன் பாண்டியன் ஆகிய படங்களின் கதைக்காகவும் சிம்மராசி படத்தின் வசனத்திற்காகவும் விருது வழங்கியது. இவ்வாறு தமிழ் சினிமாவின் வசன கர்த்தாவாக விளங்கிய ஈரோடு செளந்தர், இன்று காலமானார். உடல்நலக்குறைவால் சௌந்தர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.