×

பிரபல கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்!

பூம்புகாரில் பிறந்த பிரபல கலை இயக்குனரான கிருஷ்ணமூர்த்தி, 90 காலக்கட்டங்களில் வெளியான பல ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார். படங்களுக்கான செட் அமைக்கும் பணியில் இவர் ஒரு லெஜண்ட் ஆகவே பார்க்கப்பட்டார். வானவில், பாண்டவர் பூமி, இம்சை அரசன், பசும்பொன் உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு சிறப்பான செட் அமைத்து பலராலும் மிகுந்த பாராட்டை பெற்றவர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். வி.அய்யர்,பாரதிராஜா போன்ற பல முன்னணி இயக்குனர்களோடு பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி, தேசிய விருதுகள், கலைமாமணி
 

பூம்புகாரில் பிறந்த பிரபல கலை இயக்குனரான கிருஷ்ணமூர்த்தி, 90 காலக்கட்டங்களில் வெளியான பல ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார். படங்களுக்கான செட் அமைக்கும் பணியில் இவர் ஒரு லெஜண்ட் ஆகவே பார்க்கப்பட்டார். வானவில், பாண்டவர் பூமி, இம்சை அரசன், பசும்பொன் உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு சிறப்பான செட் அமைத்து பலராலும் மிகுந்த பாராட்டை பெற்றவர்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். வி.அய்யர்,பாரதிராஜா போன்ற பல முன்னணி இயக்குனர்களோடு பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி, தேசிய விருதுகள், கலைமாமணி விருதுகள் உட்பட 40க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றவர். இத்தகைய புகழ் பெற்ற கலை இயக்குனரான கிருஷ்ணமூர்த்தி உடல்நலக்குறைவால், நேற்று இரவு காலமானார்.

அவரது இறுதி சடங்குகள் இன்று பிற்பகல் மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. அன்னாரின் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.