×

படப்பிடிப்புக்கு அனுமதி: தமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி!

படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக உலகமே ஸ்தம்பித்துள்ளது. இதற்கு இந்தியாவும், தமிழகமும் விதிவிலக்கல்ல. தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். குறிப்பாக திரைத்துறையும், சினிமா கலைஞர்களும் முடங்கி போயுள்ளனர். பல படங்கள் வெளியிட முடியாமல் கிடப்பில் கிடக்கிறது. பாதியில் நின்ற படப்பிடிப்புகள் அரசு அறிவிப்பு வெளியிடாததால் அதன் படக்குழுக்கள் விழிபிதுங்கி உள்ளன. இருப்பினும் இத்தகையை சூழலில் சின்னதிரை படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்த
 

படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் காரணமாக உலகமே ஸ்தம்பித்துள்ளது. இதற்கு இந்தியாவும், தமிழகமும் விதிவிலக்கல்ல. தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். குறிப்பாக திரைத்துறையும், சினிமா கலைஞர்களும் முடங்கி போயுள்ளனர். பல படங்கள் வெளியிட முடியாமல் கிடப்பில் கிடக்கிறது. பாதியில் நின்ற படப்பிடிப்புகள் அரசு அறிவிப்பு வெளியிடாததால் அதன் படக்குழுக்கள் விழிபிதுங்கி உள்ளன. இருப்பினும் இத்தகையை சூழலில் சின்னதிரை படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்த நிலையில் படப்பிடிப்பு அரசு விதிமுறைகளின் படி தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியது போல் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என பெப்சி அமைப்பின் தலைவர் ஆர். கே. செல்வமணி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளில் 75 நபர்களுடன் சினிமா சூட்டிங் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா, “தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளின் படி, இருட்டிலிருந்த வெளிச்ச உலகிற்கு ஒளி காட்டி விதிகளைத் தளர்த்திய அனுமதியளித்த முதல்வர் அவர்களுக்கும், எங்கள் குறைகளை காதுகொடுத்து கேட்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.