×

விஜய் பட இயக்குனர் திடீர் மரணம்!

தமிழ் திரைப்பட இயக்குநனரான பாபு சிவன், ஆரம்பத்தில் இயக்குனர் தரணியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பின்பு விஜய்யை கதாநாயகனாக வைத்து 2009 ஆம் ஆண்டு வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள். விஜய், அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் கலவையான விமர்சனங்களை தந்தாலும், குடும்ப ரசிகர்களின் ஆதரவை பெற்று படம் பட்டையை கிளப்பியது. இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு
 

தமிழ் திரைப்பட இயக்குநனரான பாபு சிவன், ஆரம்பத்தில் இயக்குனர் தரணியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பின்பு விஜய்யை கதாநாயகனாக வைத்து 2009 ஆம் ஆண்டு வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள். விஜய், அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் கலவையான விமர்சனங்களை தந்தாலும், குடும்ப ரசிகர்களின் ஆதரவை பெற்று படம் பட்டையை கிளப்பியது. இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு விஜய் ஆண்டனி அவர்கள் இசை அமைத்தார்.

இயக்குனர் பாபு சிவன், வேட்டைக்காரன் படத்திற்கு பிறகு வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. அது மட்டுமில்லாமல் வேட்டைக்காரன் படம் தோல்வி அடைந்ததால் தான் பாபு சிவன் அடுத்த படத்தை இயக்கவில்லை என்ற ஒரு வதந்தியும் பரவியது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பாபுசிவன் அவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “ராசாத்தி” என்ற சீரியலை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் பாபு சிவன்(54) ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீரென மரணமடைந்தார். இது திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென மயங்கி விழுந்து கடந்த திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு கொரோனா தொற்று ஏதுமில்லை. கடந்த 2 நாட்களாகவே பாபு சிவன் மயக்கநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவரது வீடு தாம்பரத்தில் உள்ளது. பாபு சிவனுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.