D40 உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனங்கள்…படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷஷிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் இப்படத்தை சேர்ந்து தயாரிக்கிறது.
‘பேட்ட’ படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் தனுஷை வைத்து D40 என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஸுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷஷிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் இப்படத்தை சேர்ந்து தயாரிக்கிறது.
இந்நிலையில் D40 படத்தின் தமிழக உரிமையை Trident Arts நிறுவனம் பெற்றுள்ளது.
அதேபோல் கேரள உரிமையை Anto ஜோசப் பிலிம் கம்பெனி மற்றும் தெலுங்கானா, ஆந்திர பிரதேஷ் உரிமையை GA2 Pictures மற்றும் யூ.வி கிரேஷன் நிறுவனமும், வெளிநாட்டு விநியோக உரிமைக்கான தமிழ் மற்றும் தெலுங்கு மொழி உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 19-ம் தேதி வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.