×

இயக்குநர் ஷங்கர் படம் எடுக்க தடையில்லை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இயக்குனர் ஷங்கர் பிற படங்களை இயக்க இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. லைகா நிறுவனம் தாயரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் – 2’. இப்படத்தின் ஷூட்டிங் சென்னை நசரத்பேட்டையில் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு பிப்.19ம் தேதி படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து கோர விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே
 

இயக்குனர் ஷங்கர் பிற படங்களை இயக்க இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

லைகா நிறுவனம் தாயரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் – 2’. இப்படத்தின் ஷூட்டிங் சென்னை நசரத்பேட்டையில் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு பிப்.19ம் தேதி படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து கோர விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார், கிரேன் ஆபரேட்டரை கைது செய்தனர். விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்தார். இயக்குனர் ஷங்கரும் லைகா நிறுவனமும் கூட நிதியுதவி அளித்தனர். இந்த திடீர் விபத்தின் காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியன் – 2 படப்பிடிப்பை முடித்துக் கொடுக்காமல் பிற படங்களை இயக்க ஷங்கருக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. படத்தின் 80% பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் பணியையும் அவர் முடித்து தர வேண்டுமென மனுவில் கோரப்பட்டிருந்தது.

லைகா நிறுவனம் தொடர்ந்த அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷங்கர் தரப்பில் விளக்கம் கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், லைகா நிறுவனத்தின் மனு தொடர்பாக ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில், ஷங்கர் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.