×

ஆதரவற்றோர் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா : அதிர்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் படங்களில் நடிப்பது, படங்கள் இயக்குவது என பிசியாக இருந்தாலும் தொடர்ந்து தனது மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஏழை எளியவர்கள் என பலருக்கும் உதவி செய்து வருகிறார்.கொரோனா தடுப்பு நிதியாக 3கோடி ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்துள்ளார். மீண்டும் ரூ.50 லட்சம் அம்மா உணவகத்திற்காக நிதியுதவி செய்துள்ளார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் சென்னை அசோக்நகரில் நடத்திவரும் ஆதரவற்றோர் விடுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அங்குள்ள சிறுவர்கள், பெரியவர்கள் 18 பேர்,
 

நடிகர் ராகவா லாரன்ஸ் படங்களில் நடிப்பது, படங்கள் இயக்குவது என பிசியாக இருந்தாலும் தொடர்ந்து தனது மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஏழை எளியவர்கள் என பலருக்கும் உதவி செய்து வருகிறார்.கொரோனா தடுப்பு நிதியாக 3கோடி ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்துள்ளார். மீண்டும் ரூ.50 லட்சம் அம்மா உணவகத்திற்காக நிதியுதவி செய்துள்ளார்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் சென்னை அசோக்நகரில் நடத்திவரும் ஆதரவற்றோர் விடுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அங்குள்ள சிறுவர்கள், பெரியவர்கள் 18 பேர், 2 பெண் பணியாளர்கள் என மொத்தம் 20 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாம்.

இதனால் விடுதியை மூடும் பணியில் சுகாதாரதுறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது. ஏற்கனவே கோடம்பாக்கம், அசோக் நகர் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆதரவற்றோர் விடுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.