×

தளபதி பிறந்தநாள் ஸ்பெஷல்! காமன் டிபி வெளியீடு!

நடிகர் விஜய்யின் 46வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜூன் தொடங்கியதிலிருந்தே ட்விட்டரில் கொண்டாட தொடங்கிவிட்டனர் அவர்களது ரசிகர்கள். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்றும், முடிந்த அளவு நலப்பணிகளை செய்யுங்கள் என்றும் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். Happy birthday @actorvijay hope you have a fab one! ?? Here’s the common dp upon the request of
 

நடிகர் விஜய்யின் 46வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜூன் தொடங்கியதிலிருந்தே ட்விட்டரில் கொண்டாட தொடங்கிவிட்டனர் அவர்களது ரசிகர்கள். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்றும், முடிந்த அளவு நலப்பணிகளை செய்யுங்கள் என்றும் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபியை இன்று வெளியிடபட்டுள்ளது. இதனை நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட பிரபலங்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து #THALAPATHYBdayFestCDP என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் மாஸ் – ஆக அமர்ந்திருப்பது போலவும், பேக் ரவுண்டில் தளபதி விஜய் என எழுதப்பட்டிருப்பது போன்று எடிட் செய்யப்பட்டுள்ளது. தளபதி விஜய் பிறந்தநாளையொட்டி காமன் டிபி வெளியிடப்பட்டதையடுத்து ரசிகர்கள் கொண்டாடிவருகின்றார்.