×

’2022 எல்லோருக்கும் சூப்பரா இருக்கும்’ - பிரபலங்களின் புத்தாண்டு வாழ்த்து...

 


2021ஐ நிறைவு செய்து வழியனுப்பி வைத்து விட்டு, உலக மக்கள் அனைவரும்  2022 ஆம் ஆண்டை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்கின்றனர்.  புதிய தீர்மானங்களை எடுப்பது மற்றும் அடுத்த ஆண்டிற்கான தங்கள் இலக்குகளை திட்டமிடுவது என புத்தாண்டை  உற்சாகத்துடன் எதிர்நோக்கியிருக்கின்றனர். இந்தப் புத்தாண்டு நாளில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்  தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அவரது ட்விட்டர் பதிவில் “ அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல்  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், “நம்பிக்கைகளைக் கொணர்வதே மாற்றம். ஓர் ஆண்டு மாறி புது ஆண்டு வருகிறதெனில், அது நம்முள் புதுப்புது நம்பிக்கைகளைப் பதியனிடுகிறது. இந்தப் புத்தாண்டில் உங்கள் அனைவரின் நம்பிக்கைகளும் செயலாக்கம் பெறட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


 நடிகர் சிவக்கார்த்திகேயன் புத்தாண்டு வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.. அதில் ” எல்லோருக்கும் வணக்கம்.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. இந்த ஆண்டு நம் அனைவருக்கும் சூப்பராக இருக்கும்..  I wishing you all a very Happy and prosperous new year.. Love you all.. " என்று தெரிவித்துள்ளார்.

இவரைத்தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து செய்தியை வெளியிட்டிருக்கிறார். அதில்,

”அறிவு வழிநடத்த..
துணிவு துணையிருக்க
உழைப்பு செயல்படுத்த
நேர்மை நிலைநிறுத்த

என்ன செய்துறும்
இன்னல் எம்மை?

வா புத்தாண்டே
வாழ்த்துகிறோம் உன்னை

மலர்கொண்டு வா
கனிதந்து போ

மன்பதை வாழ்க
மானுடம் வெல்க..  “ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நடிகர் கார்த்தி, ”வாழ்க்கையைப் பற்றிய கற்றல் மனப்பான்மை அனைத்தையும் எளிதாக்குகிறது! ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வோம்!  இந்த ஆண்டும்  அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் முன்னேற்றம் நிறைந்ததாக இருக்க வாழ்த்துக்கள்! தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்!” என்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


நடிகர் தனுஷ், “அனைவருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. “ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


இதேபோல் இயக்குநர்கள் வெங்கட் பிரபு, செல்வராகவன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரித்துள்ளனர்.