×

சிவகார்த்திகேயனின் ’ அயலான்’ படத்திற்கு இடைக்கால தடை... ஹைகோர்ட் உத்தரவு..

 


டாக்டர் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அயலான்’. ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில்  ரகுல் ப்ரீத்சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.  24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தின் விநியோக உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் மேற்கொள்கிறது.

இந்நிலையில்  ‘அயலான்’ படத்திற்கு தடை விதிக்கக்கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  ஜேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரே இந்தப்படத்திற்கு தடைகோரியிருக்கிறார்.  24 ஏ.எம் ஸ்டூடியோஸ் தங்களிடம் 5 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், வட்டியுடன் சேர்த்து மொத்தம் 6 கோடியே 92 லட்சம் ரூபாய் பணம் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான் படத்தை வெளியிடவோ,  விநியோகம் செய்யவோ கூடாது என்று மனுதாரர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  2022 ஜனவரி 3ம் தேதி வரை அயலான் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.   மேலும் படக்குழுவினர் மனுதாரர் தரப்போடு சுமூகமாகப் பேசி பிரச்சனையை முடித்துக் கொள்லாம் என்றும், அல்லது மனுவிற்கு பதிலளித்து  வழக்கு தொடர் நினைத்தாலும் அது படக்குழுவின் விருப்பம் என்று தெரிவித்துள்ள படக்குழு,  விசாரணையை ஜன 3 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.