×

பிரபல இசையமைப்பாளர் வாஜித் கான் உடல்நலக்குறைவால் மரணம்!

பாலிவுட்டில் பிரபலமாக திகழும் இசையமைப்பாளர்கள் சாஜித்-வாஜித் சகோதரர்கள். 1998 ஆம் ஆண்டு சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘பியார் கியா தோ தர்ணா க்யா’ என்னும் படத்தில் மூலம் அறிமுகமான சாஜித்-வாஜித் சகோரதரர்கள் பல படங்களுக்கு இசைமயமைத்துள்ளார். குறிப்பாக, ‘தபாங்’ , ‘ஏக் தா டைகர்’, ‘வான்டட்’ என்ற படங்களுக்கும் ‘ப்யார் கரோனா’ ‘பாய் பாய்’ என்ற சல்மான்கானின் இரண்டு ஆல்பங்களுக்கும் இசைமயத்திருந்தனர். இந்நிலையில் சாஜித்-வாஜித் சகோதரர்களுள் ஒருவரான வாஜித் கான்(42) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில
 

பாலிவுட்டில் பிரபலமாக திகழும் இசையமைப்பாளர்கள் சாஜித்-வாஜித் சகோதரர்கள். 1998 ஆம் ஆண்டு சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘பியார் கியா தோ தர்ணா க்யா’ என்னும் படத்தில் மூலம் அறிமுகமான சாஜித்-வாஜித் சகோரதரர்கள் பல படங்களுக்கு இசைமயமைத்துள்ளார். குறிப்பாக, ‘தபாங்’ , ‘ஏக் தா டைகர்’, ‘வான்டட்’ என்ற படங்களுக்கும் ‘ப்யார் கரோனா’ ‘பாய் பாய்’ என்ற சல்மான்கானின் இரண்டு ஆல்பங்களுக்கும் இசைமயத்திருந்தனர்.

இந்நிலையில் சாஜித்-வாஜித் சகோதரர்களுள் ஒருவரான வாஜித் கான்(42) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில காலமாக சிறுநீரக கோளாறு பிரச்சனையில் அவதிப்பட்டு வந்த இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருந்து வந்ததால், வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார். வாஜித் கானின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதே போல இசையமைப்பாளர் அனிருத்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாஜித் கான் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.