×

பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பிச்சாச்சு... விடிய விடிய நடந்த பிக் பாஸ் கிராண்ட் லான்ச்!
 

 

கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் சீசன் 5ன் தொடக்க விழா விடிய விடிய நடந்துள்ளது. அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழக மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிக் பாஸ் சீசன் 5ன் இன்று முதல் ஒளிபரப்பப்பட உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் ஒரு நாளைக்கு முன்னதாகவே ஷூட்டிங் எடுக்கப்பட்டு மறுநாள் அது ஒளிபரப்பப்படும். அந்த வகையில், சீசன் 5ன் கிராண்ட் லான்ச் இன்று ஒளிபரப்பப்பட நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தொடக்க விழா நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் வீடு ஒவ்வொரு தீமில் வடிவமைக்கப்படும். 

அந்த வகையில் இம்முறையும் முழுக்க முழுக்க பச்சைப் பசேலென்று டிசைன் செய்யப்பட்டுள்ளது. கன்பஷன் ரூம், லிவ்விங் ஏரியா, படுக்கையறை என அனைத்தும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. பெரிதாக ஃபீனிக்ஸ் பறவை டிசைன் வைக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் சீசன் 5 என்பதை உணர்த்தும் விதமாக 5 என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கமல்ஹாசன் வீட்டை சுற்றிக்காட்டும் நிலையில் இம்முறை முன்கூட்டியே வீட்டின் புகைப்படங்கள் வெளியாகிவிட்டது. இன்று மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது.

நடிகை பவானி ரெட்டி, நடிகை லக்ஷரா, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, சுனிதா, குக் வித் கோமாளி கனி, சந்தோஷ் பிரதாப், கோபிநாத் ரவி, ஷகிலா மகள் மிலா, சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி, ஷாலு ஷம்மு, யாஷிகா ஆனந்த் நண்பர் நிரூப் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.