×

பிக் பாஸ் வீட்ல வில்லன் யாரு? ஹீரோ யாரு? : ஹவுஸ்மேட்ஸை கதறவிடுவாரா கமல்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி 55 நாட்கள் ஆகிறது. இதில் இதுவரை 4 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் 14 போட்டியாளர்கள் உள்ளனர். 50 நாட்களை கடந்தும் இந்த சீசன் சுவாரசியம் இல்லாமலே செல்கிறது.தொடர்ந்து சண்டை, கோபம், வெறுப்பு என ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களுக்கும் இந்த சீசன் ஏமாற்றம் தான். அந்த வகையில் கமலின் வருகை மட்டுமே பிக் பாஸ் ரசிகர்களுக்கு
 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி 55 நாட்கள் ஆகிறது. இதில் இதுவரை 4 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் 14 போட்டியாளர்கள் உள்ளனர். 50 நாட்களை கடந்தும் இந்த சீசன் சுவாரசியம் இல்லாமலே செல்கிறது.தொடர்ந்து சண்டை, கோபம், வெறுப்பு என ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களுக்கும் இந்த சீசன் ஏமாற்றம் தான். அந்த வகையில் கமலின் வருகை மட்டுமே பிக் பாஸ் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை தரும்படியாக உள்ளது.

இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் வரும் நடிகர் கமல் ஹாசன், நல்லவரா? கெட்டவரா? வில்லன் யாரு? ஹீரோ யாரு? தன் விளையாட்டை தானே விளையாடுறாங்களா? இல்ல அன்பால் ஏயப்பட்ட அம்பா பாயறாங்களா? வினாக்கள் பல; விடைகளை காண்போம் என்று சொல்லும்படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.