×

‘அசுரன்’ திரைப்படத்திற்கு மத்திய அரசு விருது அறிவிப்பு: இன்னொரு படம் இது தான்!

கோவாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு அசுரன் மற்றும் தேன் ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் நடக்கவிருந்த 51ஆம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழா, கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த முறை கோவாவில் நடக்கவிருக்கிறது. வரும் ஜனவரி 16 முதல் 24 தேதி வரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சர்வதேச திரைப்படவிழா நடத்தப்படவிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். சர்வதேச
 

கோவாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு அசுரன் மற்றும் தேன் ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன.

கடந்த நவம்பர் மாதம் நடக்கவிருந்த 51ஆம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழா, கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த முறை கோவாவில் நடக்கவிருக்கிறது. வரும் ஜனவரி 16 முதல் 24 தேதி வரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சர்வதேச திரைப்படவிழா நடத்தப்படவிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.

சர்வதேச திரைப்பட விழாவில் மொத்தம் 224 படங்கள் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் திரையிடப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், கோவா சர்வதேச திரைப்படவிழாவுக்கு வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படமும், கணேஷ் விநாயக் இயக்கிய ‘தேன்’ படமும் தேர்வாகியுள்ளது. கணேஷ் விநாயக் என்ற பெயரை மாற்றி மலையை அடிப்படையாகக் கொண்டு தேன் படத்தை எடுத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் விழாவில் திரையிடப்படுகிறது. அசுரன் மற்றும் தேன் ஆகிய 2 படங்களுக்கு மத்திய அரசின் பானரோமா விருதுகள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.