×

‘அசுரன்’ பட நடிகர் கொரோனாவால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக இன்று காலமானார்.அவருக்கு வயது 48 சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் நிதிஷ் வீரா. இவர் புதுப்பேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தா நிலையில் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் அங்கீகாரம் கொடுத்தது. இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து மெகா ஹிட் அடித்த அசுரன் படத்தில்
 

பிரபல நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக இன்று காலமானார்.அவருக்கு வயது 48

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் நிதிஷ் வீரா. இவர் புதுப்பேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தா நிலையில் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் அங்கீகாரம் கொடுத்தது. இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து மெகா ஹிட் அடித்த அசுரன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து அசுரன் படத்தின் தெலுங்கு ரிமேக்கிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்ற வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா இன்று கொரோனாவால் பலியானது குறிப்பிடத்தக்கது.