×

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார்: நடிகை குஷ்பு ட்வீட்

ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினி, படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று உறூதியானதால், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். நேற்று காலையில் அவருக்கு உடல் சோர்வு அதிகமாக இருந்ததால் ஐதரபாத் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரஜினிக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்றும், ரத்த அழுத்த பிரச்சனை இருப்பதும் தெரியவந்தது. ரஜினிகாந்த நலம் பெறவேண்டி பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். இதனிடையே நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், டிஸ்சார்ஜ் எப்போது
 

ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினி, படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று உறூதியானதால், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். நேற்று காலையில் அவருக்கு உடல் சோர்வு அதிகமாக இருந்ததால் ஐதரபாத் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரஜினிக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்றும், ரத்த அழுத்த பிரச்சனை இருப்பதும் தெரியவந்தது. ரஜினிகாந்த நலம் பெறவேண்டி பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், டிஸ்சார்ஜ் எப்போது செய்யப்படுவார் என்பது நாளை முடிவு செய்யப்படும் என்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். ஐதராபாத்திலுள்ள அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் பேசினேன். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ரஜினிகாந்த் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.