×

BREAKING புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், இவர் அழகர் சாமியின் குதிரை, நான் கடவுள், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் தவசி. இவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது காலம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், அவருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது உறுதியானது. முறுக்கு மீசையுடன் திரைப்படங்களில் வலம் வந்த தவசி உடல் மெலிந்து மொட்டையுடன் காட்சியளித்தது பலரையும் கண் கலங்க வைத்தது. அவரது சிகிச்சைக்கு போதிய பண வசதி
 

வருத்தப்படாத வாலிபர் சங்கம், இவர் அழகர் சாமியின் குதிரை, நான் கடவுள், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் தவசி. இவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது காலம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், அவருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது உறுதியானது.

முறுக்கு மீசையுடன் திரைப்படங்களில் வலம் வந்த தவசி உடல் மெலிந்து மொட்டையுடன் காட்சியளித்தது பலரையும் கண் கலங்க வைத்தது. அவரது சிகிச்சைக்கு போதிய பண வசதி இல்லாததால், உதவி கேட்டு இணையதளங்களில் செய்திகள் பரவின. அதன் படி நடிகர் சிவகார்த்திகேயன், சூரி, விஜய் சேதுபசி, சிம்பு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் பண உதவி செய்தனர். நடிகர் ரஜினிகாந்தும் தவசியின் உடல்நிலை குறித்து தொலைப்பேசியில் நலம் விசாரித்தார். மேலும் சமூகவலைதளங்களில் நடிகர் தவசி நலம்பெற வேண்டி ஏராளமானோர் வேண்டுதல்களை ட்வீட்களாக பதிவிட்டனர்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார். அவருக்கு வயது 60. தவசியின் மறைவுக்கு திரைபிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.