×

‘விவேக் சார் காமெடியன் இல்லை’.. உண்மையான ஹீரோ : நடிகர் சூரி உருக்கம்!

தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என்று போற்றப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். திடீர் மாரடைப்பால் நேற்று முற்பகல் 11 மணியளவில் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ செய்யப்பட்டது. எக்மோ கருவி உதவியுடன் ஐ.சி.யூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. நடிகர் விவேக்கின் மரணம் தமிழ்
 

தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என்று போற்றப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். திடீர் மாரடைப்பால் நேற்று முற்பகல் 11 மணியளவில் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ செய்யப்பட்டது. எக்மோ கருவி உதவியுடன் ஐ.சி.யூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

நடிகர் விவேக்கின் மரணம் தமிழ் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவேக்கின் மரணம் தமிழ் திரையுலகிற்கே பேரிழப்பு என நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயற்கையை பாதுகாப்பதற்காக மரங்களை நட்ட விவேக்கை இயற்கை இவ்வளவு சீக்கிரம் பறித்தது ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உங்களால் சிரித்த, சிந்தித்த கோடிக்கணக்கான மனங்கள் மட்டும் அல்ல… நீங்கள் உருவாக்கிய விழிப்புணர்வால் நடப்பட்ட கோடிக்கணக்கான மரங்களும் உங்களுக்காகக் கண்ணீர் விடுகின்றன… சென்று வாருங்கள் @Actor_Vivek சார் என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விவேக் காமெடியன் கிடையாது. அவர் உண்மையான ஹீரோ. அவருக்கு இந்த நிலை வந்திருக்கக் கூடாது. இந்த உலகம் இருக்கும் வரை அண்ணன் விவேக் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.