×

சைக்கிளில் சென்ற நடிகர் கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு!

ஆழ்வார்பேட்டை அருகே நடிகர் கவுதம் கார்த்திக்கின் செல்போனை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பிரபல நடிகர் நடிகர் கார்த்திக்கின் மகனான கவுதம் கார்த்திக் கடல், வை ராஜா வை, இருட்டு அறையில் முரட்டு குத்து, ரங்கூன், ஹர ஹர மஹாதேவகி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது பார்த்திபனுடன் இணைந்து திரில்லர் படம் ஒன்று நடித்து வருகிறார். மேலும், மாயாண்டி குடும்பத்தார்- 2வில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில்,
 

ஆழ்வார்பேட்டை அருகே நடிகர் கவுதம் கார்த்திக்கின் செல்போனை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பிரபல நடிகர் நடிகர் கார்த்திக்கின் மகனான கவுதம் கார்த்திக் கடல், வை ராஜா வை, இருட்டு அறையில் முரட்டு குத்து, ரங்கூன், ஹர ஹர மஹாதேவகி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது பார்த்திபனுடன் இணைந்து திரில்லர் படம் ஒன்று நடித்து வருகிறார். மேலும், மாயாண்டி குடும்பத்தார்- 2வில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில், இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கவுதம் கார்த்திக்கின் செல்போனை மர்ம நபர்கள் 2 பேர் பறித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கவுதம் கார்த்திக்கின் விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமராக்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.