×

போதைப்பொருள் வழக்கு - பிரபல  நடிகையின் அண்ணன் கைது!

 

பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் அண்ணன்  போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் அண்ணன்  சித்தாந்த் கபூர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த விருந்தில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி போலீசார் , கைது செய்துள்ளனர். போதைப்பொருள் பயன்படுத்தியதாக  சித்தாந்த் கபூர்  உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று இரவு நட்சத்திர விடுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து,  அங்கு போலீசார் விரைந்தனர்.  

இதையடுத்து அங்கு நடத்திய சோதனையில் நட்சத்திர விடுதியில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.  இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து   பரிசோதனைக்காக ரத்த மாதிரி எடுக்கப்பட்ட நிலையில் 35 பெயரில் 6 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட சித்தார்த் பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் என்பது கூடுதல் தகவல். கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகர்கள் கலந்து கொள்ளும் விருந்தில் போதைப்பொருள்  பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.  சமீபத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,  அவர் மீது குற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.