×

96 வது நாளில் ‘96’ திரைப்படம்!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிநடைப்போட்ட ‘96’ திரைப்படம், இன்று 96வது நாளை எட்டியுள்ளது சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி–த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிநடைப்போட்ட ‘96’ திரைப்படம், இன்று 96வது நாளை எட்டியுள்ளது. ‘மக்கள் செல்வன்’ என அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி வெளியான திரைப்படம் ‘96’. இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வெற்றியை
 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிநடைப்போட்ட ‘96’ திரைப்படம், இன்று 96வது நாளை எட்டியுள்ளது

சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதித்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிநடைப்போட்ட ‘96’ திரைப்படம், இன்று 96வது நாளை எட்டியுள்ளது.

மக்கள் செல்வன்என அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி வெளியான திரைப்படம் ‘96’.

இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வெற்றியை பெற்றது. பிரேம்குமார் இயக்கிய இப்படம், பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி வெளியானதால் இப்படத்தின் கதையை பலரும் அவர்களது சொந்த வாழ்வுடன் தொடர்புப்படுத்திக் கொண்டனர்.

மேலும், காதலர்கள் கொண்டாடித் தீர்த்த ‘96’படத்தின் ராம், ஜானு கதாப்பாத்திரம் எதார்த்தமாக இருந்ததுடன்ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான படமாக அமைந்து வெற்றி பெற்றது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கன்னடத்தில் இதன் ரீமேக் உருவாகி வருகிறது. ப்ரீதம் குபி இயக்கி வரும் இப்படத்தில் கணேஷ் நாயகனாக நடித்து வருகிறார். அர்ஜுன் சான்யா இசையமைக்கிறார். ‘99’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் த்ரிஷாவின்ஜானுகேரக்டரில் பிரபல தென்னிந்திய நடிகை பாவனா நடிக்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னைப் போன்ற பெருநகரங்களில் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த போதே சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டாலும் இந்த படம் தொடர்ந்து வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடி வருகிறது. அந்த வகையில், இன்று வெற்றிகரமாக தனது 96 ஆவது நாளை இப்படம் எட்டியுள்ளது.

இந்த தகவலை இப்படத்தின் இயக்குநர் பிரேம் குமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனையடுத்து, ட்விட்டரில் #96thdayof96 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதனை ராம்ஜானு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.