×

96 ரீமேக்கில் மீண்டும் களமிறங்கும் ஜானு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

96 தெலுங்கு ரீமேக்கில் சிறு வயது ஜானு கதாபாத்திரத்தில் மீண்டும் நடிகை கௌரி கிஷன் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். சென்னை: 96 தெலுங்கு ரீமேக்கில் சிறு வயது ஜானு கதாபாத்திரத்தில் மீண்டும் நடிகை கௌரி கிஷன் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த வருடம் இறுதியில் வெளியான படம் 96. இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பள்ளி பருவ காதலை மையமாக வைத்து வெளியான இப்படத்தில்
 

96 தெலுங்கு ரீமேக்கில் சிறு வயது ஜானு கதாபாத்திரத்தில் மீண்டும் நடிகை கௌரி கிஷன் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 

சென்னை: 96 தெலுங்கு ரீமேக்கில் சிறு வயது ஜானு கதாபாத்திரத்தில் மீண்டும் நடிகை கௌரி கிஷன் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 

நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த வருடம் இறுதியில் வெளியான படம் 96. இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பள்ளி பருவ காதலை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் ராம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விஜய் சேதுபதி, ஜானு என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் திரிஷா, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நமது பள்ளி பருவத்தை நினைவு படுத்தியிருப்பார்கள். 

இந்த நிலையில் மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த படத்தை தெலுங்கு, கன்னடா போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தெலுங்கில் ரீமேக்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில்  ஷர்வானந்த் மற்றும் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கின்றனர்.மேலும் நடிகை சமந்தா நடிக்கவிருக்கும் காட்சிகள் இரண்டு வாரத்தில் துவங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. 

இந்த நிலையில் இதில் சிறு வயது ஜானு கதாபாத்திரத்தில் யாரு நடிப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பரப்பில் இருந்தனர். தற்போது அதில் தமிழ் 96 படத்தில் நடித்த அதே கௌரி கிஷன் தான் இதிலும் நடிக்கிறார். இந்த செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் அவரது மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.