×

’96’ படம் பார்த்துட்டு தளபதி விஜய் என்ன சொன்னாரு தெரியுமா? நடிகை தேவதர்ஷினி சொன்ன சுவாரஸ்யம்!

பிகில் படத்தில் நடித்துள்ள நடிகை தேவதர்ஷினி பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். பிகில் படத்தில் நடித்துள்ள நடிகை தேவதர்ஷினி பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகர் விஜய் – இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில்
 

பிகில் படத்தில் நடித்துள்ள நடிகை தேவதர்ஷினி  பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். 

பிகில் படத்தில் நடித்துள்ள நடிகை தேவதர்ஷினி  பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். 

நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 25 ஆம் தேதி  வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பிகில்  படத்தில் நடித்துள்ள நடிகை தேவதர்ஷினி பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், பிகில்  படத்தில் என் மகளும் சிங்கபெண்களில் ஒருவராக நடிக்க வேண்டியது. ஆனால்  அவளுக்கு 10ஆம் வகுப்பு தேர்வு இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. என் மகள் விஜய்யின் தீவிர ரசிகை. என்னுடன் ஒருநாள் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாள். ஆனால் பிஸியாக  ஷூட்டிங் சென்று கொண்டிருந்ததால் போட்டோ எடுக்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து விஜய் என்னிடம் வந்து 96 படத்துல உங்கள விட உங்க பொண்ணு நல்லா நடிச்சிருந்தாங்க. நான்  சொன்னேன்னு சொல்லிடுங்கஅப்படினு சொன்னாரு. உடனே  நான் அவ இங்க தான் இருக்கா. நீங்களே சொல்லிடுங்கன்னு விஜய் சார்கிட்ட சொன்னேன். அப்புறம் விஜய் சாரும், நியத்தியும் 10 நிமிஷம் பேசினாங்க’ என்றார். தொடர்ந்து பேசிய நடிகை தேவதர்ஷினி, தான் பிகில்  படத்தில் விஜய்க்கு அக்காவாக நடிப்பதாகக் கூறியுள்ளார்.