×

83 பட அப்டேட்: ரன்வீர் சிங்கிற்கு கிளாஸ் எடுக்கும் கபில்தேவ்வின் மகள்! 

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மகள் அமியா 83 திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிகிறார் சென்னை: பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மகள் அமியா 83 திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிகிறார். கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து, 83 என்ற பெயரில் இந்தி படம் உருவாகி வருகிறது. கபீர் கான் இயக்கும் இப்படத்தில் கபில்தேவ்வாகப் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்
 

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மகள் அமியா 83 திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிகிறார்

சென்னை: பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மகள் அமியா 83 திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிகிறார்.

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து, 83 என்ற பெயரில் இந்தி படம் உருவாகி வருகிறது. கபீர் கான் இயக்கும் இப்படத்தில்  கபில்தேவ்வாகப் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

அந்த அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடிக்கிறார். சந்தீப் பட்டீலாக, அவர் மகன் சிரங் நடிக்கிறார். மற்றும் பங்கஜ் திரிபாதி,சாஹில் கட்டார், சஹிப் சலீம் உட்பட பலர் நடிக்கின்றனர். 

இந்நிலையில் இப்படத்தில் கபில்தேவ் ஏற்கனவே உதவி வரும் நிலையில், அவரது  மகள் அமியா படத்தில் உதவி இயக்குநராக இணைந்திருக்கிறார். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் மே மாதம் 15 ஆம் தேதி லண்டனில் தொடங்கவுள்ளது .தொடர்ந்து 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்தப் படத்தில் நடிப்பவர்களுக்கு மும்பை கிரிக்கெட் மைதானத்தில், முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பல்விந்தர் சிங் சாந்து பயிற்சி அளித்து வருகிறார். அதை அமியா ஒருங்கிணைத்து வருகிறார்.

இதுகுறித்து சந்தீப் பட்டீல் மகன் சிராங் கூறுகையில்’ எனது தந்தையும் அமியாவின் தந்தையும் உலகக் கோப்பை போட்டியில் ஒன்றாக விளையாடியவர்கள். இருந்தாலும் பட ஷூட்டிங்கில் தான் அமியாவை சந்தித்தேன். எங்களது தினசரி பயிற்சிகளை ஒருங்கிணைப்பவராக அவர் இருக்கிறார். ஏதாவது மீட்டிங் என்றால் அவர்தான் எங்களுக்குத் தகவல் தெரிவிப்பார்’என்று கூறியுள்ளார். 

மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சூர்யா 38 திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்