×

72 குண்டுகள் முழங்க ‘பாடும் நிலா’ எஸ்பிபி-யின் உடல் நல்லடக்கம்!

மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 5ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த செய்தியே அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இசை அவரை நிச்சயம் மீட்டுக் கொண்டு வரும் என கோடான கோடி ரசிகர்கள் தெரிவித்த நிலையில், எழுந்து வா பாலு என எஸ்.பி.பியின் நண்பர்கள் உருக்கத்துடன் பேசினர். பின்னர், அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததாக
 

மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த மாதம் 5ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த செய்தியே அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இசை அவரை நிச்சயம் மீட்டுக் கொண்டு வரும் என கோடான கோடி ரசிகர்கள் தெரிவித்த நிலையில், எழுந்து வா பாலு என எஸ்.பி.பியின் நண்பர்கள் உருக்கத்துடன் பேசினர். பின்னர், அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததாக சரண் வெளியிட்ட வீடியோ மகிழ்ச்சியை உண்டாக்கியது.

அவர் மீண்டு வந்து விடுவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், பாடும் நிலா எஸ்பிபியின் உயிர் பிரிந்து விட்டதாக அதிர்ச்சி தரும் செய்தி நேற்று வெளியானது. அவர் மறைந்தாலும் அவரது பாடல்களும் நினைவலைகளும் என்றென்றும் எங்களுடன் இருக்கும் என ரசிகர்கள் இணையதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், எஸ்பிபி மறைவு இசை உலகில் யாராலும் நிரப்ப முடியாத பேரிழப்பு என திரைப்பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தங்களது துயரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மறைந்த எஸ்பிபியின் உடலுக்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. பிறகு 24 போலீசார் 3 முறை, 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கோடான கோடி ரசிகர்களின் கண்ணீருடன் மறைந்தது பாடும் நிலா..