×

52 வயதில் 5வது திருமணம் செய்துகொண்ட பிக் பாஸ் பிரபலம்! அவருக்கோ வயது 75…!

தனது 52 வயதில் 5 ஆவது முறையாக திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். நடிகர் -நடிகைகள் திருமணம் எப்படி பேசும் பொருளாகுமோ அதைவிட அவர்கள் விவாகரத்து செய்தி கூடுதல் பரபரப்பை கிளப்பும் எனலாம். ஆனால் இவை இரண்டும் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் தனது 52 வயதில் 5 ஆவது முறையாக திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். 2010ல் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் தற்போது தயாரிப்பாளர் ஜோன் பீட்டரை
 

தனது 52 வயதில் 5 ஆவது முறையாக திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

நடிகர் -நடிகைகள் திருமணம் எப்படி பேசும் பொருளாகுமோ அதைவிட அவர்கள் விவாகரத்து செய்தி கூடுதல் பரபரப்பை கிளப்பும் எனலாம். ஆனால்  இவை இரண்டும் சாதாரணமான ஒன்றாகிவிட்டது.  அந்த வகையில் ஹாலிவுட் நடிகை  பமீலா ஆண்டர்சன்  தனது 52 வயதில் 5 ஆவது முறையாக திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

2010ல் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் தற்போது  தயாரிப்பாளர்  ஜோன் பீட்டரை  திருமணம் செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 75. சுமார் 35 ஆண்டாக லிவிங் வாழ்க்கையிலிருந்த இவர்கள் கடந்த 20 ஆம் தேதி கலிஃபோர்னியாவில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில்  அடியெடுத்து வைத்துள்ளனர். 

இதுகுறித்து கூறியுள்ள  தயாரிப்பாளர்  ஜோன் பீட்டர், ‘ஒரு நடிகையாக  பமீலாவுக்கு இன்னும் அவருக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் கண்களில் சொக்கிப்போய் தான் காதலில் விழுந்தேன். கடந்த 35 வருடமாக அவருடன் காதலில் இருந்துள்ள நான் அவரை மரியாதையாக நடத்துகிறேன்’ என்றார்.