×

5 இயக்குநர்களின் குறும்படங்கள் “புத்தம் புது காலை” ஓடிடியில் வெளியாகிறது!

தமிழில் 5 இயக்குநர்கள் இயக்கியுள்ள புத்தம் புது காலை என்ற 5 குறும்படங்கள் அமேசான் பிரைமில் வெளியாகிறது. சுஹாசினி மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோரால் இயக்கப்பட்ட குறும்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் அமேசான் ஓடிடி தளத்தில் புத்தம் புது காலை வரும் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியாகிறது. இதை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே கொரோனா காலத்தில் கடந்த
 

தமிழில் 5 இயக்குநர்கள் இயக்கியுள்ள புத்தம் புது காலை என்ற 5 குறும்படங்கள் அமேசான் பிரைமில் வெளியாகிறது. சுஹாசினி மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோரால் இயக்கப்பட்ட குறும்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் அமேசான் ஓடிடி தளத்தில் புத்தம் புது காலை வரும் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியாகிறது. இதை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே கொரோனா காலத்தில் கடந்த 6 மாதமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் படைப்பாளிகள் பலரும் வீட்டிலிருந்தபடியே குறும்படங்களை இயக்கினர். அந்த வகையில் முன்னணி வரிசையில் உள்ள இயக்குநர்கள் தனித்தனியே இயக்கிய குறும்படங்கள் இணைந்து ஒரே கலவையாக ஓடிடி தளத்தில் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.