×

41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து!

41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது. சபரிமலை செல்ல அதுதான் தடையாக இருக்கிறது என்று நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார். கேரளா: 41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது. சபரிமலை செல்ல அதுதான் தடையாக இருக்கிறது என்று நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார். சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து அங்கு பதட்டமான சூழலே நிலவி வருகின்றது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர்
 

41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது. சபரிமலை செல்ல அதுதான் தடையாக இருக்கிறது என்று நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

கேரளா: 41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது. சபரிமலை செல்ல அதுதான் தடையாக இருக்கிறது என்று நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து அங்கு பதட்டமான சூழலே நிலவி வருகின்றது.  உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட போது, பிந்து, கனகதுர்கா ஆகிய 50 வயதிற்குட்பட்ட பிந்து, கனகதுர்கா என்ற இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசித்துவிட்டு திரும்பினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சபரிமலை விவகாரம் குறித்து நடிகை பிரியா வாரியர் கூறும் போது, ‘இது மிகவும் அர்த்தமற்றது.  சமத்துவத்திற்காகப் போராட வேண்டும் என்றால் நீண்ட தூரம் செல்ல வேண்டும். சபரிமலை விவகாரத்தில் பல ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும். ஒரு பக்தர் மலைக்குச் செல்ல 41 நாள் விரதம் இருக்கிறார் என்றால் அதைப் பெண்கள் கடைபிடிக்க முடியாது. 41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது. சபரிமலை செல்ல அதுதான் தடையாக இருக்கிறது’ என்றார்.