×

2வது திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகை?!: உண்மை நிலவரம் என்ன?

சென்னை: நடிகை அமலா பால் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்ததை அடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: நடிகை அமலா பால் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்ததை அடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் அறிமுகமான அமலா பால் தனது 24 வயதில் இயக்குநர் விஜய்யை திருமணம் செய்தார். பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.இதையடுத்து அமலாபால்
 

சென்னை: நடிகை அமலா பால் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்ததை அடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகை அமலா பால் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்ததை அடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் அறிமுகமான அமலா பால் தனது 24 வயதில் இயக்குநர் விஜய்யை திருமணம் செய்தார். பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.இதையடுத்து  அமலாபால் மீண்டும்  தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிஸியாகி விட்டார்.  தற்போது இவர் ஆடை படத்தில் நடித்து வருகிறார்.  

இந்நிலையில் 27 வயதாகும் அமலா பால்  இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில், ‘நானாக முடிவெடுத்த எனது முதல் திருமணம் சரியாக அமையவில்லை. ஆகையால், எனது இரண்டாவது திருமணம் பற்றி முடிவெடுப்பதை எனது தாய் தந்தையின் முடிவுக்கே விட்டுவிட்டேன். தனது பிள்ளைக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை அமைய வேண்டும் என்பதில் அவர்களுக்கு இல்லாத அக்கறையா? ஆகையால், அவர்கள் சொல்லும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வேன்’ என்று கூறியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால்  இது குறித்து அமலா பால் எந்த அதிகாரப்பூர்வ  அறிவிப்பும் தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.