×

#2Point0TrailerLaunch தமிழில் பேசி அசத்திய அக்ஷய்குமார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தமிழில் பேசியுள்ளார். சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தமிழில் பேசியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள ‘2.0’ திரைப்படம் வரும் நவ.29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சத்யம் திரையரங்கில்
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தமிழில் பேசியுள்ளார்.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தமிழில் பேசியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள ‘2.0’ திரைப்படம் வரும் நவ.29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சத்யம் திரையரங்கில் இன்று வெளியிடப்பட்டது. டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் அக்ஷய்குமார் தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தமிழில் வணக்கம், மகிழ்ச்சி என்று தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், ‘எனது உச்சரிப்பில் பிழை இருந்தால் மன்னியுங்கள். பேரும் புகழும் உடைய ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், மகான் .ஆர்.ரகுமானுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. தமிழக மக்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிஎன்று தமிழில் கூறினார்.

மேலும், ’2.0’ படத்த்ல் நிறைய கற்றுக் கொண்டேன். ஷங்கர் ஒரு ஜீனியஸ் மட்டுமல்ல அவர் ஒரு விஞ்ஞானியும் கூட என்று கூறினார்.