×

#2point0 அக்ஷய்குமாரின் ‘பக்ஷிராஜன்’ கேரக்டர் உருவாக இவர் தான் காரணமா?

‘2.0’ திரைப்படத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ள ‘பக்ஷிராஜன்’ கதாபாத்திரம் பறவையியல் மேதம் சலீம் அலியின் சாயலில் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை: ‘2.0’ திரைப்படத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ள ‘பக்ஷிராஜன்’ கதாபாத்திரம் பறவையியல் மேதம் சலீம் அலியின் சாயலில் இருப்பதாக கூறப்படுகிறது. லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலை மையமாக வைத்து வெளியான
 

‘2.0’ திரைப்படத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ள ‘பக்ஷிராஜன்’ கதாபாத்திரம் பறவையியல் மேதம் சலீம் அலியின் சாயலில் இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை: ‘2.0’ திரைப்படத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ள ‘பக்ஷிராஜன்’ கதாபாத்திரம் பறவையியல் மேதம் சலீம் அலியின் சாயலில் இருப்பதாக கூறப்படுகிறது.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ள கேரக்டர் ‘பேர்ட் மேன் ஆஃப் இந்தியா’ புகழ் சலீம் அலி என்பவரது நிஜ வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதன் முதலில் இந்தியா முழுவதும் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பை நடத்திய சலீம், பறவைகள் குறித்து பல்வேறு புத்தங்களை எழுதியதுடன், ஆராய்ச்சிகளும் மேற்கொண்டவர்.

அரிய பறவைகளின் இனத்தை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட சலீன், ‘பேர்ட் மேன் ஆஃப் இந்தியா’ என அன்போடு அழைக்கப்பட்டார். இந்தியாவின் உயரிய விருதான ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’ உள்ளிட்ட விருதுகளை பெற்ற சலீம், கடந்த 1987ம் ஆண்டு ஜூன் மாதம் காலமானார்.

இவரது வாழ்க்கையை தழுவியே அக்ஷய்குமாரின் ‘பக்ஷிராஜன்’ என்ற கேரக்டர் வடிவமைக்கப்பட்டதாக, இப்படத்தின் வசனகர்த்தாவும், எழுத்தாளருமான ஜெயமோகம் தெரிவித்துள்ளார்.