×

அண்ணன் சிரஞ்சீவியை உயிருள்ளவரை மறக்கமாட்டேன்… நடிகர் பொன்னம்பலம் உருக்கமான வீடியோ

நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை செலவுகளுக்காக தவித்தபோது, நடிகர் கமல்ஹாசன் அவருக்கு கை கொடுத்தார். பொன்னம்பலத்தின் மருத்துவ செலவுகளுக்கு உதவியதோடு அல்லாமல், அவரின் குழந்தைகளின் படிப்பு செலவுக்கும் உதவினார். இந்நிலையில் பொன்னம்பலத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு செலவுகளில் நடிகர் சிரஞ்சீவியும் தனது பங்களிப்பை செய்திருக்கிறார். கடந்த ஒரு வருடமாக கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் திரைக்கலைஞர்களுக்கு தனது அறக்கட்டளை மூலமாக
 

நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை செலவுகளுக்காக தவித்தபோது, நடிகர் கமல்ஹாசன் அவருக்கு கை கொடுத்தார். பொன்னம்பலத்தின் மருத்துவ செலவுகளுக்கு உதவியதோடு அல்லாமல், அவரின் குழந்தைகளின் படிப்பு செலவுக்கும் உதவினார்.

இந்நிலையில் பொன்னம்பலத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு செலவுகளில் நடிகர் சிரஞ்சீவியும் தனது பங்களிப்பை செய்திருக்கிறார்.

கடந்த ஒரு வருடமாக கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் திரைக்கலைஞர்களுக்கு தனது அறக்கட்டளை மூலமாக உதவிகள் செய்து வரும் சிரஞ்சீவி, பொன்னம்பலத்தில் அறுவை சிகிச்சை செலவுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கியிருந்தார்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம். ஜெய்ஸ்ரீரம். ரொம்ப நன்றி அண்ணே.. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நீங்க கொடுத்த 2 லட்ச ரூபாய் எனக்கு ரொம்பவும் உதவியாக இருந்தது. உயிருள்ளவரை மறக்கமாட்டேன். அண்ணனுக்கு எனது மனமார்ந்த நன்றி. ஆண்டவர் எப்போதும் உங்களை..உங்கள் பெயர் கொண்ட ஆஞ்சநேயரும் உங்களை சிரஞ்சீவியாக வைத்திருப்பார்கள். நன்றி அண்ணே. ஜெய் ஸ்ரீராம்.’’என்றூ தெரிவித்துள்ளார்.