×

’’புகைப்படங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரு கொடுங் காலத்தில் நுழைகிறோம்’’

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிகுழு, காலா, அசுரன் நடித்த நிதிஷ் வீரா கொரோனாவால் நேற்று மரணம் அடைந்தார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். அரசியல் பிரபலங்களும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எழுத்தாளரும், காங்கிரஸ் எம்.பியுமான ஜோதிமணி, சென்னையில் எழுத்தாளர் ஞானி வீட்டில் நடக்கும் கேணி சந்திப்பில், முற்போக்கு சிந்தனையுள்ள நிதிஷ் வீராவுடன் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, தனது துக்கத்தை வெளிப்படுத்தி
 

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிகுழு, காலா, அசுரன் நடித்த நிதிஷ் வீரா கொரோனாவால் நேற்று மரணம் அடைந்தார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். அரசியல் பிரபலங்களும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எழுத்தாளரும், காங்கிரஸ் எம்.பியுமான ஜோதிமணி, சென்னையில் எழுத்தாளர் ஞானி வீட்டில் நடக்கும் கேணி சந்திப்பில், முற்போக்கு சிந்தனையுள்ள நிதிஷ் வீராவுடன் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, தனது துக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

’’நிதிஷின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. நம்பவே முடியவில்லை. சினிமா கனவுகளுடன் பரிக்‌ஷாவுக்கு வந்தவன். நண்பரொருவர் இந்த பழைய புகைப்படத்தை இன்று அனுப்பினார். ஞாநி வீட்டில் கேணி சந்திப்பில் எடுத்தது. புகைப்படங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரு கொடுங் காலத்தில் நுழைகிறோம். போய்வா நிதிஷ்!’’என்று தனது துக்கத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார்.

’’நடிகர் நிதிஷ் வீராவின் மறைவு அதிரச்சியும் வேதனையும் அளிக்கிறது. வளரும் கலைஞர். முற்போக்குச் சிந்தனையாளர். அவரது மறைவு சனநாயக சக்திகளுக்கான பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுவோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’’என்று குறிப்பிட்டிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.