×

பிரபல பாடகர் கோமகன் கொரோனாவால் மரணம்

பிரபல பாடகரும், மேடை இசைக்கலைஞருமான கோமகன் கொரோனாவால் உயிரிழந்தார். நடிகர் விவேக், இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, தயாரிப்பாளர் பாபுராஜா ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கும் நிலையில் பாடகர் கோமகன் கொரோனாவால் உயிரிழந்திருப்பது திரையுலகினரை அதிர வைத்திருக்கிறது. கண்பார்வை அற்ற மாற்றுத்திறனாளியான கோமகன், சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படத்தில் ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில், ’’மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்’’ ’’உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்வலி
 

பிரபல பாடகரும், மேடை இசைக்கலைஞருமான கோமகன் கொரோனாவால் உயிரிழந்தார்.

நடிகர் விவேக், இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, தயாரிப்பாளர் பாபுராஜா ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கும் நிலையில் பாடகர் கோமகன் கொரோனாவால் உயிரிழந்திருப்பது திரையுலகினரை அதிர வைத்திருக்கிறது.

கண்பார்வை அற்ற மாற்றுத்திறனாளியான கோமகன், சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படத்தில் ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில்,

’’மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்’’

’’உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்’’

-ஒருசில வரிகளை பாடி நடித்து பிரபமானார். தன்னம்பிக்கை ஊட்டும் அப்பாடலில் மேலும் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக பாடி நடித்திருந்தார் கோமகன்.

கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இசைப்பள்ளி நடத்தி வந்த கோமகன், 2019ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றிருந்தார்.