×

நடிகர் விவேக் அஸ்தி மீது மரக்கன்று நட்டு வைத்த உறவினர்கள்

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 17ம் தேதி அன்று காலமானார். ஊரெங்கும் மரங்களை நட்டு வைத்த அவரின் இறுதி ஊர்வலத்திலும் சிலர் மரக்கன்றுகளுடன் சென்றனர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்னதை அடுத்து, ‘கிரீன் கலாம்’ என்ற அமைப்பை தொடங்கி ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்கிற லட்சியத்தோடு இதுவரைக்கும் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்கிற விவேக்கின் கனவை நினைவாக்க பலரும் முன்வந்து மரக்கன்றுகளை நட்டுவைத்து வருகிறார்கள்.
 

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 17ம் தேதி அன்று காலமானார். ஊரெங்கும் மரங்களை நட்டு வைத்த அவரின் இறுதி ஊர்வலத்திலும் சிலர் மரக்கன்றுகளுடன் சென்றனர்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்னதை அடுத்து, ‘கிரீன் கலாம்’ என்ற அமைப்பை தொடங்கி ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்கிற லட்சியத்தோடு இதுவரைக்கும் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்கிற விவேக்கின் கனவை நினைவாக்க பலரும் முன்வந்து மரக்கன்றுகளை நட்டுவைத்து வருகிறார்கள்.

நடிகர், நடிகைகள் மட்டுமல்லாது பொதுமக்களும், விஜய் ரசிகர்களும் விவேக் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் விவேக்கின் அஸ்தி அவரின் சொந்த ஊரான சங்கரன் கோவில் அருகே இருக்கும் பெருங்கோட்டூர் கிராமத்திற்கு எடுத்து சென்றனர். அங்கு விவேக்கின் உறவினர்கள் அஸ்திக்கு மரியாதை செய்தனர். பின்னர் குழி தோண்டி அஸ்தியை புதைத்து, அந்த இடத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

மரங்களின் காதலன் விவேக்கின் நினைவாக, விவேக்காகவே இந்த மரம் இந்த ஊருக்கு இருக்கும் என்று சொல்லி நெகிழ்கிறார்கள் உறவினர்கள்.