×

சிறுமி விவகாரம்: நடிகர் பற்றிய மீம், வீடியோக்களை அகற்ற வலியுறுத்தல்

இதற்குதானே ஆசைப்பட்டாய் படத்தில் நடித்த டேனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனார். அவரின் இன்ஸ்டாகிராமில் 17வயது சிறுமிக்கு மெசேஜ் அனுப்பி, அவரை வீடியோ காலில் பேசச்சொல்லி வற்புறுத்தி வந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து சமூக வலைத்தளங்களின் டேனியை பற்றி மீம் போட்டும், வீடியோ வெளியிட்டும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தன் வழக்கறிஞர் மூலமாக டேனி அளித்துள்ள விளக்கத்தில், டேனி மீது தவறான வதந்தி பரப்பப்படுகிறது. அவருக்கு இருக்கும் புகழை கெடுக்க சிலர் முயற்சிக்கின்றனர். அவரை
 

இதற்குதானே ஆசைப்பட்டாய் படத்தில் நடித்த டேனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனார். அவரின் இன்ஸ்டாகிராமில் 17வயது சிறுமிக்கு மெசேஜ் அனுப்பி, அவரை வீடியோ காலில் பேசச்சொல்லி வற்புறுத்தி வந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து சமூக வலைத்தளங்களின் டேனியை பற்றி மீம் போட்டும், வீடியோ வெளியிட்டும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தன் வழக்கறிஞர் மூலமாக டேனி அளித்துள்ள விளக்கத்தில், டேனி மீது தவறான வதந்தி பரப்பப்படுகிறது. அவருக்கு இருக்கும் புகழை கெடுக்க சிலர் முயற்சிக்கின்றனர். அவரை களங்கப்படுத்தும் மீம், வீடியோக்களை உடனடியாக அகற்றி விடுங்கள். இல்லை என்றால் சைபர் கிரைம் மூலமாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.