×

’’தம்பி… அந்த வார்த்தையை எப்படி சொல்வேன் தம்பி’’- சத்யராஜ் உருக்கம்

தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என்று போற்றப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் காலமானார். திடீர் மாரடைப்பால் நேற்று முற்பகல் 11 மணியளவில் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. விவேக்கின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக டிடிவி தினகரன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என்று போற்றப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் காலமானார். திடீர் மாரடைப்பால் நேற்று முற்பகல் 11 மணியளவில் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

விவேக்கின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக டிடிவி தினகரன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சரத்குமார், யோகிபாபு, மனோபாலா, மயில்சாமி, ராதாரவி, கவுண்டமணி, சார்லி, தாமு, ராஜேஷ், கஞ்சா கருப்பு, நாசர், வைரமுத்து, நடிகை ஜோதிகா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சத்யராஜ் விவேக்கின் மறைவு குறித்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளி்யிட்டிருக்கிறார். அதில், ’’சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த சின்னக்கலைவாணர் என்று பேர் வாங்குன, என் அன்புத்தம்பி விவேக்.. எப்படி சொல்றது.. அவர் மறைந்துவிட்டார் என்கிற வார்த்தையை பயன்படுத்த மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர் நம்மோடு இல்லாம போனதுக்கு என்னோட ஆழ்ந்த வருத்தத தெரிவிச்சிக்கிறேன். வார்த்தைகளால அவரது குடும்பத்தினருக்கோ, அவரது ரசிகர்களுக்கோ , கலையுலகத்துக்கோ, எனக்கோ ஆறுதல் சொல்ல முடியாது. அது முடியாத காரியம். தம்பி… உன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான ரசிகர்களில், சகோதர்களில் நானும் ஒருவன் தம்பி..’’என்று உருக்கமுடன் தெரிவித்திருகிறார்.