×

விவேக்கை ஏன் காப்பாற்ற முடியவில்லை? -மருத்துவமனை பரபரப்பு விளக்கம்

நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் சினிமா படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் விவேக், படப்பிடிப்பிற்கு பின்னர் வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விவேக், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்தார். இதுகுறித்து சிம்ஸ் மருத்துவமனை விளக்கம் அளித்திருக்கிறது. சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் ராஜீவ் சிவசாமி,
 

நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் சினிமா படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் விவேக், படப்பிடிப்பிற்கு பின்னர் வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விவேக், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்தார். இதுகுறித்து சிம்ஸ் மருத்துவமனை விளக்கம் அளித்திருக்கிறது.

சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் ராஜீவ் சிவசாமி, ’’நடிகர் விவேக் நேற்று காலையில் பதினோரு மணிக்கு அனுமதிக்கப்பட்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது விவேக்கிற்கு சுயநினைவு நாடித்துடிப்பு இல்லை உடல் நிலையை பரிசோதித்து உடனடியாக அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செலுத்தப்பட்டது செய்யப்பட்டது இதன் பின்னர் விவேக்கின் உடல்நிலை மோசமாகவே இருந்தது விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலன் அளிக்கவில்லை’’ என்று அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.