×

ப்ளூசட்டைமாறனின் ‘ஆன்டி இந்தியன்’ படத்திற்கு சென்சார் தடை

திரைவிமர்சனம் என்ற பெயரில் திரைக்கு வரும் படங்களை விளாசித்தள்ளுவது ப்ளூசட்டமாறன் ஸ்டைல். மாறனின் இந்த விமர்சன போக்கிற்கு ஆதரவாளர்களும் உண்டு. எதிர்ப்பாளர்களும் உண்டு. பல தயாரிப்பாளர்கள் இவர் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள். கடுமையான விமர்சனங்களை மாறன் முன்வைக்கும்போதெல்லாம், ‘’நீ ஒரு படம் எடுத்துப்பாரு.. அப்ப தெரியும் அடுத்தவங்க வலி’’என்றும், ‘’பெரிய இது மாதிரி பேசுறியே நீ ஒரு படத்தை சகட்டுமேனிக்கு விமர்சனம் பண்ணுறியே..உனக்கு படம் எடுக்க தெரியுமா?’’ என்று பலரும் உசுப்பேற்ற, மாறனும் படம் எடுப்பதாக
 

திரைவிமர்சனம் என்ற பெயரில் திரைக்கு வரும் படங்களை விளாசித்தள்ளுவது ப்ளூசட்டமாறன் ஸ்டைல். மாறனின் இந்த விமர்சன போக்கிற்கு ஆதரவாளர்களும் உண்டு. எதிர்ப்பாளர்களும் உண்டு. பல தயாரிப்பாளர்கள் இவர் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

கடுமையான விமர்சனங்களை மாறன் முன்வைக்கும்போதெல்லாம், ‘’நீ ஒரு படம் எடுத்துப்பாரு.. அப்ப தெரியும் அடுத்தவங்க வலி’’என்றும், ‘’பெரிய இது மாதிரி பேசுறியே நீ ஒரு படத்தை சகட்டுமேனிக்கு விமர்சனம் பண்ணுறியே..உனக்கு படம் எடுக்க தெரியுமா?’’ என்று பலரும் உசுப்பேற்ற, மாறனும் படம் எடுப்பதாக அறிவித்தார்.

அன்று முதல், ‘’உன் படம் ரிலீசாகட்டும் நாங்க எப்படி கழுவி கழுவி ஊத்துறோம் பாரு’’ என்று பலர் கங்கணம் கட்டிக்கொண்டி இருக்கிறார்கள். ஒவ்வொரு படங்களையும் அலசி விமர்சனம் செய்யும் மாறனின் படைப்பு எப்படி இருக்கும் என்றும் பலர் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

இத்தனை எதிர்ப்பு – ஆதரவுக்கு மத்தியில் மாறன் இயக்கியிருக்கும் சினிமா, ‘ஆன்டி இந்தியன்’. இந்த படத்திற்கு அவர் கதை,திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தினை சென்சார் சர்டிபிகேட் பெறுவதற்காக, ஏப்ரல் 5ம் தேதி அன்று தணிக்கைக் குழுவின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சமகால மதம் சார்ந்த பிரச்சனகளையும், அரசியலையும் மையப்படுத்து இந்த எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்.

படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் இந்த படத்திற்கு முழுவதுமாக தடை போட்டுவிட்டனர். ஆனால், மறு தணிக்கைக்கு மேல்முறையீடு செய்வோம் என்கிறது தயாரிப்பு தரப்பு.