×

இயக்குநர் ஜனநாதனுக்கு நாளை இறுதிச்சடங்கு; திரையுலகினர் இரங்கல்

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு, படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன்(61), விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய லாபம் படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் இன்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு சென்னையில் நாளை நடைபெறுகிறது. சேரன் உள்ளிட்ட இயக்குநர்கள் ஜனநாதன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ‘’லவ் யூ சார்’’ என்று இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி. ’’நாம்
 

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு, படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன்(61), விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய லாபம் படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் இன்று காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு சென்னையில் நாளை நடைபெறுகிறது.

சேரன் உள்ளிட்ட இயக்குநர்கள் ஜனநாதன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

‘’லவ் யூ சார்’’ என்று இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.

’’நாம் ரத்தினத்தை இழக்கிறோம். இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனை இழந்துவிட்டதைக் கேட்டு மிகுந்த வருத்தமாக இருக்கிறது, சமூகப் பிரச்சினைகளில் அவர் தயாரித்த படங்களுக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்’’என்று தெரிவித்துள்ளார் குஷ்பு.

’’கனத்த இதயத்துடன் குட்பை சொல்கிறோம்’’ என்று தெரிவித்துள்ள நடிகை ஸ்ருதிஹாசன், ’’உங்கள் ஞானத்துக்காகவும், கனிவான வார்த்தைகளுக்காகவும் உங்களுடன் பணியாற்றுவது ஒரு மகிழ்ச்சி, நீங்கள் எப்போதும் என் எண்ணங்களில் இருப்பீர்கள்! அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்’’ என்று தெரிவித்துள்ளார்.

நெஞ்சம் நொறுங்கிவிட்டது என்று இயக்குநர் மோகன் ராஜாவும், செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று இயக்குநர் வெங்கட் பிரபுவும் தெரிவித்துள்ளனர். எங்கள் நினைவுகளில் இருந்து யாரும் உங்களை பிரிக்க முடியாது என்று நடிகர் ஜெயம் ரவியும் தெரிவித்துள்ளனர்.

கார்ல் மார்க்ஸ் நினைவுதினத்தில் அவர் காலமாகியுள்ளார் என்று இசையமைப்பாளர் டி.,இமான் தெரிவித்திருக்கிறார்.

ஜனநாதன் ஒரு கம்யூனிஸ்ட். அவரது ஒவ்வொரு படைப்பும் கம்யூனிசம்தான். அதனால்தான் அவருக்கு பலரும் ‘செவ்வணக்கம்’சொல்லி வருகிறார்கள்.