×

2011 ஆம் ஆண்டே கொரோனா தாக்கத்தை கூறிய அமெரிக்க படம்

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில்
 

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து 2011 ஆம் ஆண்டே எடுக்கப்பட்ட contagion திரைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. ஒரு கொடிய வைரஸானது அமெரிக்காவில் தோன்றி, அதன்பின் வெவ்வேறு நாடுகளுக்கும் பரவுகிறது. இதனால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்புதுடன், பல்வேறு அசம்பாவிதங்களும் பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன என்பதே இப்படத்தின் கதைக்கரு… இன்று உலகம் முழுக்க எந்த சூழல் நிலவுகிறதோ அந்த சூழலை தத்ரூபமாக எடுத்துரைக்கிறது contagion படம். 

மக்காவோவில் ஒரு சமையல்காரர் வைரஸால் பாதிக்கப்பட்ட பன்றி இறைச்சியை கையாண்ட பிறகு கைகளை கழுவாமல் மற்ற பாத்திரங்களை தொடுகிறார். இதனால் அந்த வைரஸ் முதன்முதலாக மனிதர்களுக்கு பரவ தொடங்கியது. அந்த வைரஸ்க்கு MEV-1  என்று பெயரிடுகின்றனர். கொரோனா வைரஸின் தாக்கத்தை போலவே நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த வைரஸின் தாக்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றன. கொரோனாவின் தாக்கத்தை அன்றே சொன்ன இயக்குநருக்கு பல்வேறு நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு பொழுதுபோக்கிற்காக இந்த படங்களை பார்த்த பலர் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.