×

2.0 சம்பள சர்ச்சை : மௌனம் கலைத்த லைகா நிறுவனம்!

மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படத்தில் பணியாற்றியவருக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை 2.0 திரைப்படத்தின் சப்டைட்டிலில் பணியாற்றிய பெண் ஒருவர் தனக்கு இன்னும் சம்பளம் தரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு லைகா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 2.0. லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. இதுவொருபுறமிருக்க
 

மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படத்தில் பணியாற்றியவருக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை

2.0 திரைப்படத்தின் சப்டைட்டிலில் பணியாற்றிய பெண் ஒருவர்  தனக்கு இன்னும் சம்பளம் தரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு லைகா  நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 2.0. லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன்  உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.

இதுவொருபுறமிருக்க 2.0 திரைப்படத்தில் இரண்டு மொழிகளில் சப்டைட்டில் செய்து கொடுத்த ரேக்ஸ் என்பவர் தனக்கும், தன் குழுவினருக்கும் அதற்கான சம்பளம் வரவில்லை என்று டிவிட்டரில் பதிவிட்டார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படத்தில் பணியாற்றியவருக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டானது   சர்ச்சையைக் கிளப்பியது. 

இந்நிலையில் இதுகுறித்து லைகா  நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில், லைகா புரொடக்ஷன்ஸ்  பட்ஜெட்டைப் பொருட்படுத்தாமல், நாங்கள் தயாரிக்கும் அனைத்து படங்களுக்கும் சப்டைட்டிலுக்கு  ரூ.50 ஆயிரத்தை பட்ஜெட்டாக  ஒதுக்குகிறோம்.  ஏனென்றால், அதற்கான  தொழில்நுட்ப செயல்முறையை முடிக்க எங்களிடம் வசதிகள் உள்ளன.  ரேக்ஸ் என்பவர் 2.0 படத்திற்கு  சப்டைட்டில் பணிக்காக  2 லட்சம் கேட்டார். இது எங்களுக்கு உடன்படவில்லை. இதனால் சொந்த விருப்பத்தின் பேரில் அவர் வேலைகளை முடித்து கொடுத்தார். ஆனால்  அவர் மீண்டும் கேட்ட தொகையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் ஊடகங்கள் முன் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார். நாங்கள் 10 நாட்களுக்கு பிறகு ரேக்ஸை அணுகி 1 லட்சம் ரூபாய்  கொடுக்க உடன்பட்டோம். ஆனால் அது நாங்கள் ஒப்புக்கொண்ட பட்ஜெட் அல்ல. இருப்பினும் ஒரு சிறிய கால அவகாசம் கிடைத்ததால்  ஒரு நல்லெண்ணத்தில் அதை செய்ய முற்பட்டோம். ஆனால் அவர் பிரச்னையை  முடிக்க விரும்பவில்லை. மீண்டும் எங்களிடம் 2 லட்சம் ரூபாய் கேட்டார். 

இது நிச்சயமாகச் சந்தை வீதமல்ல. நாங்கள் ஒரு தயாரிப்பு நிறுவனமாக, மாறுபட்ட வகைகளில்  பல்வேறு படங்களைத் தயாரிக்கிறோம் மற்றும் அதில் பல விற்பனையாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர் கேட்கும் தொகை  இயல்புநிலையாக இல்லை.  வர்த்தக நடைமுறையின் படி மட்டுமே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். ஆனால்  இது  ஊடகங்களில்  வெடித்து பெரிதாகிவிட்டது.   இந்த விவகாரத்தில்  எங்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கம் மட்டுமே உள்ளது. இது பகிரங்கப்படுத்தப்பட்டதால், ரூ .1 லட்சம் தொகையைத் தீர்க்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று பதிவில் குறிப்பிட விரும்புகிறோம்.

தயாரிப்பாளர்கள் எந்தவொரு படத்திலும் தங்கள் வியர்வை, கடின உழைப்பு மற்றும் நிதி பல தடைகளைத் தாண்டி முதலீடு செய்கிறார்கள். ஒரு சாதாரண ட்வீட் மூலம் ஒருவரை இழிவுபடுத்துவது மிகவும் எளிதானது. ஒரு திரைப்படத்தை நிறைவு செய்வதற்கான செயல்முறைக்குப் பங்களிக்கும் ஒவ்வொரு விற்பனையாளரையும் நாங்கள் மதிக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.