×

ஏன் கமல் மாதிரி பேசுறீங்க.. ஒண்ணும் புரியல..

க்ரைம், திரில்லர் ஜானரில் இயக்குநர் எழில் இயக்கும் படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வருகிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இப்படத்தின் இடைவேளையில், மேக்கப் போடும்போது கண்ணாடியில் முகம் பார்த்த பார்த்திபனுக்கு, அப்போது தோன்றிய உணர்வுகளை அப்படியே பதிவு செய்திருக்கிறார். அகமது முகமதில்…முகமது? கண்ணாடி ஒரு ரசாவாதி ! அலாவுதீன் அற்புத விளக்கு போல்…. பிம்பம் உரச உரச… ரசம் கூடும், ரசனையும்! தன் வசமுள்ள திறன் வளர்பிறை ஆகும். கண் மூடி வரும் கனவு, கண்மூடித்தனமானது. யாரும்
 

க்ரைம், திரில்லர் ஜானரில் இயக்குநர் எழில் இயக்கும் படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வருகிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இப்படத்தின் இடைவேளையில், மேக்கப் போடும்போது கண்ணாடியில் முகம் பார்த்த பார்த்திபனுக்கு, அப்போது தோன்றிய உணர்வுகளை அப்படியே பதிவு செய்திருக்கிறார்.

அகமது முகமதில்…முகமது? கண்ணாடி ஒரு ரசாவாதி ! அலாவுதீன் அற்புத விளக்கு போல்…. பிம்பம் உரச உரச… ரசம் கூடும், ரசனையும்! தன் வசமுள்ள திறன் வளர்பிறை ஆகும். கண் மூடி வரும் கனவு, கண்மூடித்தனமானது. யாரும் பொறுப்பேற்க இயலாதது. ஆனால் கண்ணாடி என்பது கண்ணெதிர் கனவு யந்திரம் என்றும், தன் குஞ்சு பொன் குஞ்சு என்றே நம்ப வைக்கும் ஒரு பிம்பத் தாய்! ஊர் மேய்ந்து விட்டு அந்த சட்டத்திற்குள்(frame) நுழையும் போதெல்லாம் பொலிவோடே உன்னை வைத்திருக்கும் மந்திரத் துணை. பார்> வியந்துப் பார்.உன்னை அழகூட்டி மகிழும் பார்லர். என்று பதிவு செய்திருக்கிறார்.

இயக்குனர் எழில் பட இடைவேளையில் ஸ்டில்ஸ் ரவி இப்படத்தினை எடுத்ததாகவும் பதிவில் தெரிவித்திருக்கிறார் பார்த்திபன்.

எந்த ஒரு வியசத்தையும் புதிய கோணத்தில் அனுகி அதை வெளிப்படுத்துவது பார்த்திபனுக்கு அழகு என்று பலரும் பார்த்திபனின் இந்த உணர்வுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், கவிதை மாதிரி எழுதி இருப்பதால், கொஞ்சம் புரியவில்லை; ஆனால் அழகாக இருக்கிறது என்றும், ஏன் கமல் மாதிரி பேசுறீங்க.. ஒண்ணும் புரியல.. என்றும் சிலர் கமெண்ட் செய்கிறார்கள்.