×

10,000 திரையரங்குகளில் ரிலீசாகும் ‘2.0’: சாதனை வேட்டையை தொடங்கிய சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகும் என கூறப்படுகிறது. சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகும் என கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படம் மிகுந்த பொருட் செலவில் உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இந்திய அளவிலான பெரிய பட்ஜெட் படம் என்பதால், இதன் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. அதிநவீன
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகும் என கூறப்படுகிறது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகும் என கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படம் மிகுந்த பொருட் செலவில் உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இந்திய அளவிலான பெரிய பட்ஜெட் படம் என்பதால், இதன் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டதால் படத்தின் ரிலீஸ் பலமுறை தள்ளிப்போனது. இந்நிலையில், அனைத்து பணிகளும் நிறைவடைந்து வரும் நவ.29ம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் சுமார் 10,000 திரையரங்குகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலக வரலாற்றிலேயே இதுவரை எந்த திரைப்படமும் புரியாத சாதனையை ரஜினிகாந்த்தின் ‘2.0’ திரைப்படம் படைக்கவுள்ளது.

முன்னதாக கடந்த 1991-ல் ரஜினி நடிப்பில் ரிலீசான ‘தளபதி’ திரைப்படம் 100 திரையரங்குகளிலும், 2007ம் ஆண்டு வெளியான ‘சிவாஜி’ திரைப்படம் 1000 திரையரங்குகளிலும் ரிலீசாகி சாதனையை படைத்தது. தற்போது மீண்டும் அடுத்த சாதனைக்கு ரஜினியின் ‘2.0’ ஆயத்தமாகி வருகிறது.

இந்தியாவில் முதன்முறையாக 3டி கேமராவில் படமாக்கப்பட்ட ‘2.0’ திரைப்படத்தை ஹாலிவுட் படங்களை போல் ஐமெக்ஸ் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.