×

100 நாள் கொண்டாட்டம் : உற்சாகத்தில் திளைத்துள்ள ரஜினி, அஜித் ரசிகர்கள்!

பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து படக்குழுவினர் ரசிகர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். சென்னை: பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து படக்குழுவினர் ரசிகர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் பொங்கலன்று வெளியானது. இயக்குநர் சிவா -அஜித் கூட்டணியில் வேல்;வெளியான திரைப்படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான்
 

பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து படக்குழுவினர் ரசிகர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

சென்னை:  பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து படக்குழுவினர் ரசிகர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் பொங்கலன்று  வெளியானது. இயக்குநர் சிவா -அஜித் கூட்டணியில் வேல்;வெளியான  திரைப்படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்தார். 

அதே போல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – ரஜினி கூட்டணியில் உருவான  படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்தனர். முதல்முறையாக ரஜினி பி[படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 

இந்த இரண்டு படங்களும், பொங்கல்  விருந்தாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூல் சாதனையும் படைத்தது. குறிப்பாக அஜித் படங்களிலேயே அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படமாக விசுவாசம் மாறியது. இந்நிலையில் பேட்ட விஸ்வாசம்  இந்த இரண்டு படங்களுமே வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது.  இந்த வெற்றி கொண்டாட்டத்தை ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள்  #ViswasamGlorious100Days #100daysofMaranaMassPetta என்ற ஹேஷ்டேக்களை டிரெண்டாக்கி வருகின்றனர்.  

 

‘பேட்ட படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. பேட்ட படத்தின் 100-வது நாள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று  அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ளார்.

 

இதே போல் விஸ்வாசம்  படத்தின் தயாரிப்பு நிறுவனமும் அப்படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளது. 

இதையும் வாசிக்க: நடிகர் விஜயின் கோரிக்கைக்கு தலை சாய்த்த தேர்தல் ஆணையம்…ரசிகர்கள் மகிழ்ச்சி!