×

 தம்பி சிம்புவுக்கு கல்யாணத் தேதி குறிச்சாச்சு…பொண்ணு யாரு தெரியுமா?

தங்கை, தம்பிகளுக்குத் திருமணம் முடிந்த பிறகும் முரட்டு சிங்கிளாக வலம் வந்துகொண்டிருக்கும் சிம்புவின் அராஜகத்துக்கு முடிவுகட்டும் வகையில் இன்னும் மூன்றே மாதங்களில் அவருக்குத் திருமணம் செய்து வைக்க அவரது தந்தை ராஜேந்தர் முடிவெடுத்திருப்பதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்கை, தம்பிகளுக்குத் திருமணம் முடிந்த பிறகும் முரட்டு சிங்கிளாக வலம் வந்துகொண்டிருக்கும் சிம்புவின் அராஜகத்துக்கு முடிவுகட்டும் வகையில் இன்னும் மூன்றே மாதங்களில் அவருக்குத் திருமணம் செய்து வைக்க அவரது தந்தை ராஜேந்தர் முடிவெடுத்திருப்பதாக அவரது நட்பு வட்டாரங்கள்
 

தங்கை, தம்பிகளுக்குத் திருமணம் முடிந்த பிறகும் முரட்டு சிங்கிளாக வலம் வந்துகொண்டிருக்கும் சிம்புவின் அராஜகத்துக்கு முடிவுகட்டும் வகையில் இன்னும் மூன்றே மாதங்களில் அவருக்குத் திருமணம் செய்து வைக்க அவரது தந்தை ராஜேந்தர் முடிவெடுத்திருப்பதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கை, தம்பிகளுக்குத் திருமணம் முடிந்த பிறகும் முரட்டு சிங்கிளாக வலம் வந்துகொண்டிருக்கும் சிம்புவின் அராஜகத்துக்கு முடிவுகட்டும் வகையில் இன்னும் மூன்றே மாதங்களில் அவருக்குத் திருமணம் செய்து வைக்க அவரது தந்தை ராஜேந்தர் முடிவெடுத்திருப்பதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா காதலில் தொடங்கி தமிழ் சினிமாவில் வயதுக்கு வருவதற்கு முன்பே அதிக கிசுகிசுக்களில் அடிபட்டவர் சிம்பு. இவருக்கென்று சூப்பரான ரசிகர் பட்டாளம் இருந்தபோதும் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் தனது மார்க்கெட்டில் சொந்த செலவில் மண்ணள்ளிப்போட்டுகொள்பவர். ஆனாலும் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் எப்படியோ இடம்பிடித்தபடியே இருப்பார்.

’83ல் பிறந்த சிம்புவுக்கு தற்போது 36 வயதாகிறது. அவரது தங்கை இலக்கியாவுக்கும் தம்பி குறளரசனுக்கும் கூட திருமணம் முடிந்துவிட்ட நிலையில் சிம்பு இன்னும் பெயரளவில் பேச்சிலராகவே இருக்கிறார். குறிப்பாக சமீபத்தில் குறளரசனுக்குத் திருமணம் நடந்தபிறகு டி.ராஜேந்தருக்கு இது மிகவும் தர்மசங்கடமாகவே மாறியிருக்கிறது. சிம்புவுக்குத் திருமணம் எப்போது என்று நிருபர்கள் கடமை தவறாமல் கேள்வி கேட்பதும் அதற்கு பதில் சொல்வதற்குள் டி.ஆர். நான்கு கர்சீப்களை நனைப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இனியும் இப்படி கர்சீப்களை நனைத்துக் காலத்தைக் கடத்த முடியாது என்று முடிவெடுத்த டி.ஆர். சில தினங்களுக்கு முன்பு சிம்புவை அழைத்து, “உனக்கு வர்ற ஆகஸ்ட்ல கல்யாணம். இன்னியிலர்ந்து பொண்ணு பாக்கப்போறேன். நான் சொல்ற பொண்ணக் கட்டிக்கிட்டு சந்தோஷமா வாழ ஆரம்பி’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். தம்பியும் வேறு வழியின்றித் தலையாட்டியிருக்கிறாராம். சினிமா குடும்பத்தைச் சேர்ந்த ஆனால் படங்களில் நடிக்க ஆர்வமில்லாத அந்தப் பெண்ணை ஏற்கனவே முடிவு செய்துவிட்டே டி.ஆர்.பேசியிருக்கிறாராம்.